வெளியிட்ட தேதி : 25.12.2021

யூடியூபர்கள் ஏன் தங்களது வருமானத்தினை மறைத்துக் கொள்கின்றனர். ஏன் அவர்கள் உண்மையான‌ வருமானத்தினை மறைக்கிறார்கள் ?

பெரும்பாலான‌ பிரபல யூ-டியூப்பர்கள் அல்ல‌ அனைத்து YouTuber-களும் தங்களது வருமானத்தை வெளிக்காட்ட தயங்குவார்கள். இது ஏனென்றால் அவர்கள் பதிவிடும் வீடியோக்களில் இருந்து பெறப்படும் வருமானமானது உங்களின் பார்வையைப் (Youtube views) பொறுத்துதான். அவர்களுக்கு வருமானம் என்பதே பார்வையிடும் நேரம் மற்றும் வீடியோக்களில் காண்பிக்கப்படும் விளம்பரங்கள் தான்.

இந்த‌ வீடியோக்களை யூடியூபில் மட்டுமல்ல‌ Youtube போன்ற‌ பிற‌ வீடியோ ஷேரிங் தளங்களிலும் (Youtube Sharing Platform) அப்லோடு செய்து சம்பாதித்துக் கொள்ளலாம். பிற விளம்பர பரிவர்தணைகள் கூட அவர்கள் வீடியோவில் இடம் பெறும். இந்த‌ பண‌ விஷயத்தை வெளிப்படையாகச் உங்களிடம் சொல்லிவிட்டால் இவன் நம்மால் தான் இவ்வளவு சம்பாதிக்கிறான ? என்று நீங்கள் அவர்களது வீடியோவை பார்பதை நிறுத்திவிட்டால் அப்புறம் அவர்களுக்கு திண்டாட்டம்தான். ஆகையினால் இதை யாருமே கூறுவதில்லை.

படைப்பாளிகள் தங்கள் வருமானத்தைப் பற்றி உலகுக்குச் சொல்வதை YouTube தடுக்கவில்லை. இது ஒரு வதந்தி மற்றும் கட்டுக்கதை. உங்கள் வருமானத்தை தாரளமாக‌ வெளியிடலாம் மற்றும் YouTube இதைக்குறித்து சிறிதும் கவலைப்படாது.

யூடியூபர்கள் (YouTuber-கள்) வாங்கும் மாத சம்பளம் எவ்வளவு எனத் தெரிந்துகொள்ளுங்கள்

சரி. இதை தெரிந்துகொள்ள‌ விரும்புகிறீர்களா ? அப்படியென்றால் இதைச் செய்யுங்கள். உங்களுக்கு எந்த யூடிப் நடத்தும் நபர்கள் வருமான விவரங்கள் வேண்டுமோ அவற்றை கீழ்கண்ட வலைதளத்தில் தேடிக் கொள்ளலாம். இந்த வலைதளம் புள்ளியியலை பகுப்பாய்வு செய்து தருகிறது. தோரயமாக இதில் காட்டப்படும் குறைந்த பட்ச வருமானத்தில் முன் பின் இருக்கலாம். யூடிபினால் செர்டிபைடும் செய்யப்பட்டுள்ளது.

https://socialblade.com/

உண்மை நிலை என்ன‌ ? ஏன் யூடியூபர்கள் (YouTubers) வருமானத்தினை மறைக்க‌ வேண்டும் ? என்ன‌ காரணம் ?

நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிலையை அடையும்வரை YouTube பணம் தருவதில்லை. அனைத்து சேனலுக்கென்று பார்வை நேரம், சந்தாதாரர்கள் எண்ணிக்கை என குறைந்தபட்ச‌ எண்ணிக்கையினை யூடியூப் வகுத்துள்ளது. இதை எட்டிப்பிடித்தால் தான் நீங்கள் பணம் சம்பாத்திகவே ஆரம்பிக்க‌ முடியும். அதற்குப் பின், நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்கும் பட்சத்தில், நீங்கள் நிறைய சம்பாதிக்கலாம்.

யூடியூபர்கள் (YouTubers) வருமானத்தினை சொல்ல மாட்டார்கள், ஏனென்றால், இது தனிப்பட்டது, ஒரு பெரிய நிறுவனத்தில் உள்ளவர்கள் தாங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதை உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள். மிகப் பெரிய காரணங்கள் என்னவென்றால், அதில் நிறைய வேலைகள் உள்ளன.

நீங்கள் அவர்களிடம் பெரிய தொகையைச் சொன்னால், உண்மையில் பார்வையாளர்கள் உங்களது வருமானம் அவர்களால்தான் வருகின்றது என்று நினைக்கலாம். நீங்கள் எப்போதாவது ஒரு திரைப்படம், ஒரு பாடல், புத்தகம் அல்லது பணம் செலுத்தும் பொழுதுபோக்கு பொருளை விற்க விரும்பினால், ஆயிரக்கணக்கான டாலர்கள் ஈட்ட‌ முடியும், இரண்டாவது காரணம், நிறைய வரித்தொகையும் செலுத்த வேண்டும். பார்க்க முடியாத செலவுகள் ஏராளம்.

நிறைய பேர் இதை ஒரு உண்மையான வணிகமாக பார்க்காததால், "அதற்கு நீங்கள் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் ? நீங்கள் ஏற்கனவே அவ்வ‌ளவு பணம் சம்பாதித்துவிட்டீர்கள்" என்று மக்கள் கூறுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன‌.

மேலும் பதிப்புரிமைச் சிக்கல்கள், வழக்கறிஞர் ஆலோசனை, போதிய‌ பார்வை பெறாத‌ வீடியோக்கள், குறிப்பிட்ட‌கால‌ வருமானம், நிலையற்ற‌ ஏற்ற இறக்கமான வருமானம் என்பதையும் காரணம் கொள்ள‌ வேண்டும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.