வாட்ஸ்அப் சாட்களை நிரந்தரமாக டெலீட் செய்யாமல் மறைக்க வேண்டுமா? இந்த எளிய வழிகளை பின்பற்றவும்...
Do You Want To Hide WhatsApp Chat Without Deleting It? Follow These Simple Tips
உடனடி செய்தியிடல் (Instant messaging app) செயலியான வாட்ஸ்அப் எப்போதுமே தனது பயனர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கி, பல சிறந்த பயனுள்ள அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்பில், உங்கள் சாட்டிங் அனுபவத்தினை முற்றிலும் மாற்றும் பல அம்சங்களைக் கொண்டது வாட்ஸ்அப் . ஆனால் சில அம்சங்கள் சில பயனர்களுக்கு தெரிவதில்லை. அத்தகைய ஒரு அம்சத்தைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். இந்த வசதியினால் வாட்ஸ்அப் சாட்டினை (WhatsApp chat ) முற்றிலுமாக டெலீட் செய்யாமல் மறைக்க முடியும், மேலும் உங்கள் விருப்பமின்றி யாரும் அதைப் படிக்க முடியாது.
உங்கள் அரட்டையை எப்படி மறைப்பது
முதலில், வாட்ஸ்அப்பைத் திறக்கவும், அதன் பிறகு மறைக்க விரும்பும் Chatஐ கிளிக் செய்யவும்.
இப்போது அந்த அரட்டையைத் தட்டிப் பிடிக்கவும். இதற்குப் பிறகு, சில விருப்பங்கள் மேல்நோக்கி தோன்றும். இவற்றில் ஒன்று கீழ்னோக்கிய பெட்டியுடன் ஆன அம்புக்குறி விருப்பம். வழக்கமாக இது மூன்று புள்ளி பொத்தானுக்கு இடப்பக்கம் இருக்கும்.
காப்பக பொத்தானைத் தட்டவும். அதைத் தட்டினால் உங்கள் அரட்டை காப்பகமாக (Archive) உள்ளே சேமிக்கப்பட்டு இருக்கும். இது சிலருக்கு தெரிவதில்லை.
இந்த அரட்டையை நீங்கள் பார்க்க நினைக்கும் போதெல்லாம், நீங்கள் WhatsApp Chat (அரட்டையின்) கீழே ஸ்க்ரோல் செய்ய வேண்டும், அங்கு நீங்கள் Archived என்ற விருப்பத்தைப் பெறுவீர்கள். அதைத் தட்டினால், அரட்டை காப்பகப் மெனுவைக் காணலாம். நீங்கள் அதை மீட்டெடுக்க விரும்பினால், அந்த Archive பட்டனை அழுத்தி பிடித்து, ஒருமுறை தட்டவும். இது உங்கள் அரட்டையை மீட்டெடுக்கும்.