வெளியிட்ட தேதி : 26.11.2021

Beware! Joker virus back on Google Play Store, Uninstall these 14 Android apps immediately

ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்கள் ஜாக்கிரதை! . கூகுள் ப்ளே ஸ்டோர் செயலிகளில் மிகவும் ஆபத்தான மால்வேர் ஜோக்கர் ‘வைரஸ்’ (Joker virus) மீண்டும் வெளிவந்துள்ளது. இந்த ஜோக்கர் வைரஸ் என்பது தீங்கிழைக்கும் குறியீடாகும், இது ஆண்ட்ராய்டு பயன்பாடுகளில் மறைந்து உங்கள் தொடர்புகள் மற்றும் உரைச் செய்திகள் சாதனத் தகவல், OTP கள் போன்ற தகவல்களை ஹேக் செய்யலாம் மற்றும் பல அங்கீகரிக்கப்படாத விஷயங்களைச் செய்யலாம்.

நாளுக்கு நாள், உலகளவில் தொழில்நுட்பமானது வளர்ந்துகோண்டே போவதால், அதை பிரயோகப்படுத்தி, சிலர் பாதகமான செயல்களை செய்து ஏராளமான பணம் சம்பாதித்து வருகின்றனர். அதில் ஒன்று தான் டிஜிட்டல் வைரஸ்கள், அந்த வகையை சேர்ந்த ஜோக்கர் வைரஸ்களின் தாக்கம் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. இது உங்களின் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள ஆண்ட்ராய்டு செயலிகளில் நேரடியாக ஊடுருவி உங்களுடைய முக்கிய மெசேஜ்கள், ஓடிபி, பாஸ்வேர்டு, ஸ்மார்ட்போன் பற்றிய பிற தகவல்கள் ஆகியவற்றை உங்களுக்கு தெரியாமலே எடுத்துவிடும்.

ஜோக்கர் மால்வேர் (Joker malware)

ஜோக்கர் மால்வேர் (Joker malware) முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் ஜோக்கர் வைரஸ் (Joker virus) பற்றிய வலைப்பதிவு இடுகையை Google வெளியிட்டது மற்றும் அதன் இருப்பை உறுதிப்படுத்தியது. 2019 ஆம் ஆண்டு முதல் ஜோக்கர் மால்வேரின் அச்சுறுத்தலைக் குறைக்க கூகுள் முயன்று வந்தாலும், சில‌ ஆண்ட்ராய்டு செயலிகளின் வழியாக‌ அவ்வப்போது இந்த‌ வைரஸ்கள் ஊடுருவிக் கொண்டிருக்கிறது.

ஜோக்கர் வைரஸ், அதன் குறியீடு, மற்றும் செயல்படுத்தும் முறை அல்லது பேலோட்-மீட்டெடுக்கும் நுட்பங்களை மாற்றுவதன் மூலம் Google Play Store க்கு மீண்டும் மீண்டும் விடாப்பிடியாக‌ வருகின்ற‌ அபாயமான‌ மால்வேர்களில் ஒன்றாகும். எஸ்எம்எஸ், காண்டாக்ட் லிஸ்ட், பயனர்களின் தரவுகள் மற்றும் பல விஷயங்களை இந்த‌ வைரஸ் திருடலாம்.

Kaspersky மால்வேர் ஆய்வாளர், Tatyana Shishkova கருத்துப்படி, இந்த தீங்கிழைக்கும் வைரஸ் 14 Android பயன்பாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மால்வேர் ஆய்வாளர் இந்த பாதிக்கப்பட்ட பயன்பாடுகளின் பெயர்களை தனது ட்வீட்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்படி இந்த 14 செயலிகள் இருந்தால் அதை உடனே அன் இன்ஸ்டால் செய்வது நல்லது.

 1. ஸ்மார்ட் டிவி ரிமோட் ஆப் (Smart TV Remote:)
 2. ஈஸி பிடிஎஃப் ஸ்கேனர் ஆப் (Easy PDF Scanner)
 3. வால்யூம் பூஸ்டர் லவ்டர் சவுண்ட் ஈகுவலைசர் (Volume Booster Louder Sound Equalizer)
 4. ஃபிளாஷ்லைட் ஃபிளாஷ் அலர்ட் ஆன் கால் (Flashlight Flash Alert on Call:)
 5. வால்யூம் பூஸ்டரிங் ஹியரிங் எயிட் (Volume Boosting Hearing Aid)
 6. பேட்டரி சார்ஜிங் அனிமேஷன் பப்பில் எஃபெக்ட் (Battery Charging Animation Bubble Effects)
 7. நவ் QR கோடு ஸ்கேன் (Now QRCode Scan)
 8. சூப்பர்-கிளிக் விபிஎன் (Super-Click VPN)
 9. பேட்டரி சார்ஜிங் அனிமேஷன் வால்பேப்பர் (Battery Charging Animation Wallpaper)
 10. கிளாசிக் எமோஜி கீபோர்டு (Classic Emoji Keyboard)
 11. டாஸ்லிங் கீபோர்டு (Dazzling Keyboard)
 12. எமோஜி ஒன் கீபோர்டு (EmojiOne Keyboard)
 13. ஹாலோவீன் கலரிங் (Halloween Coloring)
 14. சூப்பர் ஹீரோ எஃபெக்ட் (Super Hero-Effect).
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.