வெளியிட்ட தேதி : 06.08.2021

Apple’s plan to scan every picture on your iPhones in the US for Child Sexual Abuse Material (CSAM)

ஆப்பிள் நிறுவனம் (Apple) குழந்தை பாலியல் துன்புறுத்தல் பொருளை (Child Sexual Abuse Material (CSAM)) கண்டறிதலுக்காக‌ அமெரிக்காவில் உள்ள‌ அனைத்து ஐபோன்களையும் ஸ்கேன் செய்வதாக ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஆப்பிள் நிறுவனம் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து iCloud, iMessage, Siri மற்றும் Search இல் மாற்றங்களைச் செய்கிறது.

இதற்கென்று, iPhone, iPad ஆகிய iOS சாதனங்களில் சிறார் பாலியல் துன்புறுத்தல் படங்களைக் கண்டறிந்து புகார் அளிக்கும் அம்சத்தை Apple நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. சிறார்களை பாதுகாப்பதோடு, சிறார் பாலியல் துன்புறுத்தல் படங்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் இத்தகைய‌ நடவடிக்கையை எடுத்துள்ளது.

இருப்பினும், பாதுகாப்பு நிபுணர்கள் இம்மாதிரியான‌ அம்சத்தால் கண்காணிப்பு மற்றும் தரவு கசிவு அபாயங்கள் ஏற்பட‌ வாய்ப்புள்ளதாகவும், புதிய அம்சத்தை அரசாங்கங்களும் மற்ற அமைப்புகளும் தவறாகப் பயன்படுத்தலாம் என சில மின்னிலக்க உரிமை அமைப்புகள் குறைகூறியுள்ளன.

பயனாளர்கள், Apple நிறுவனத்தின் iCloud-ல் படங்கள் பதிவேற்றபடும்போது, அவை சிறார் பாதுகாப்பு அமைப்புகள் வழிகாட்டும் பாலியல் துன்புறுத்தல் படங்களுடன் (NCMEC database) ஒப்பிடப்படும். ஆப்பிள் நிறுவனம் இதை உண்மையில் கிளவுட்டில் செய்யவில்லை, உங்கள் ஐபோனில் இந்த செயல்களைச் செய்கிறது. ஒரு படம் iCloud சேமிப்பகத்திற்கு அனுப்பப்படுவதற்கு முன், அறியப்பட்ட CSAM ஹாஷ்களுடன் ( CSAM hashes) சரிபார்த்து சோதனையினை மேற்கொள்கின்றது இந்த‌ அல்காரிதம் (algorithm).

உங்கள் ஐபோனில் iCloud sync off / ஒத்திசைவு இணைக்கப்படாது இருந்தால், ஸ்கேனிங் வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

iMessage க்கு, ஆப்பிள் ஒரு ஸ்கேன் செய்து CSAM படங்களை மங்கச் செய்யும். கூடுதலாக, ஒரு குழந்தை அத்தகைய படத்தைப் பார்க்கும்போது, பெற்றோர்கள் அதைப் பற்றிய அறிவிப்பைப் பெறுவார்கள், அதனால் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும்.

iphone scan for child abuse

ஒரு குழந்தை அத்தகைய படத்தை அனுப்ப முயன்றால், அவர்கள் எச்சரிக்கப்படுவார்கள், மேலே சென்றால், பெற்றோருக்கு ஒரு அறிவிப்பு அனுப்பப்படும். குழந்தை 13 வயதிற்குட்பட்டவராக இருந்தால் மட்டுமே பெற்றோருக்கு அறிவிப்பு அனுப்பப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 13-17 வயதுடைய இளைஞர்கள், தங்கள் சொந்த ஐபோன்களில் மட்டுமே எச்சரிக்கை அறிவிப்பைப் பெறுவார்கள்.

அத்தகைய படங்கள் குறித்து, அமெரிக்காவின் காணாமற்போன, துன்புறுத்தப்படும் சிறார்களுக்கான‌ தேசிய நிலையத்திடம் Apple நிறுனவனம் புகார் அளிக்கும்.

ஆனால், பயனாளர்களின் தனிநபர் அந்தரங்கத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக Apple தெளிவுபடுத்தியது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.