ட்விட்டர் பயனரின் ட்வீட்களை எளிதாகத் தேடும் அம்சத்தை வெளியிடுகிறது
Twitter is rolling out a feature to search a user’s tweets easily
உலகளவில் பிரபல சமூக வலைதலங்களுள் ட்விட்டருக்கு எப்போதும் தனித்துவமான இடம் உண்டு. இப்போது ட்விட்டர் அடுத்தவர்களின் ட்வீட்களைத் தேடும் தேடல் அம்சத்தினை புதிய அப்டேட் ஆக கொண்டு வந்துள்ளது. இந்த அப்டேட்டானது அனைத்து
பயனாளர்களுக்கும் பெற இயலாது. குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே தற்போது கிடைத்துள்ளது. இந்த தேடல் அம்சத்தின் மூலம் குறிப்பிட்ட ஒருவர் பதிவிட்ட ட்வீட்களைத் தேட அவரின் Profileக்குள் செல்ல வேண்டும். பின்னர் ஃபுரோபைல் புகைப்படத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Search ஆப்ஷனை கிளிக் செய்து அவரின் டுவிட்களை keyword மூலம் தேடி எடுக்கலாம்.
முன்னதாக ஒருவரின் ஐடியை Search ஆப்ஷனில் பதிவிட்டு பின்னர் அந்த ட்வீட் தொடர்பான keyword-ஐ டைப் செய்து அந்த டுவிட்டை கண்டுபிடிக்கலாம். ஆனால் தற்போதைய புதிய அப்டேட்டின் படி, நாம் எந்த Userன் பழைய ட்வீட்களை தேட விரும்புகிறோமோ அவரது சுயவிவர (user’s profile) பக்கத்திற்குச் சென்று எளிதாய் தேட முடிகிறது.
IOS இல் உள்ள சில Twitter பயனர்கள் தனிப்பட்ட பயனரின் ட்வீட்களைத் தேடுவதை எளிதாக்கும் அம்சத்தினை பெறத் தொடங்கியுள்ளனர். அணுகல் உள்ளவர்களுக்கு, பயனரின் சுயவிவரத்திற்குச் (user’s profile) செல்லும்போது, பயனரின் சுயவிவரப் பேனரில் திரையின் மேல் வலது மூலையில் மூன்று-புள்ளி மெனுவுக்கு (user’s profile banner, next to the three-dot menu) அடுத்து ஒரு புதிய தேடல் ஐகானைக் காண்பீர்கள். பயனரின் ட்வீட்களைத் தேட, முக்கிய வார்த்தைகளைத் தட்டச்சு செய்யலாம். இந்த அம்சம், உலகளாவிய iOS இல் உள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்றும், இணையம் மற்றும் ஆண்ட்ராய்டில் (web and Android) மெதுவாக வெளிவரும் என்றும் கூறினார்.