வெளியிட்ட தேதி : 06.11.2021

Teenage Girls mental health pitfalls of Instagram

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் பார்ப்பதால் இளம்பெண்களின் மனநிலையில் பாதிப்பு ஏற்படுத்துவதாக பேஸ்புக் நிகழ்த்திய‌ ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இளம் வயதினர் / டீனேஜ் பெண்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்ற‌ சமூக ஊடகங்களில் இன்ஸ்டாகிராம் (Instagram) ஒன்று. இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துபவர்களில் 40%க்கும் மேலானோர் 20 வயதுக்குக் குறைவானவர்கள்.

சமீபத்தில், பேஸ்புக் (Facebook) நிறுவனம் இன்ஸ்டாகிராம் குறித்த‌ ஆய்வு ஒன்றை முன்னெடுத்துள்ளது. இந்த‌ ஆய்வின் முடிவுகள் தற்போது இன்ஸ்டாகிராம் பயன்பாடு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிகம் பயன்படுத்தும் இளம்பெண்கள் தங்களின் உடல், அழகு, தோற்றம் குறித்து அதிகம் கவலைப்படுவதாக அந்த ஆய்வின் முடிவில் தெரிய‌ வந்துள்ளது.

நான் ஜிம்மிற்கு நிறைய சென்றிருந்தாலும், என் உடல் இன்ஸ்டாகிராமில் தாக்கத்தைச் செலுத்துபவர்களின் உடல்போல் இல்லை என்கின்ற‌ வருத்தம் தமக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் இன்ஸ்டாகிராமில் காணப்படும் புகைப்படங்கள் பெரும்பாலும் ஃபோட்டோஷாப் செய்யப்படுபவை. அதுபோல‌ இல்லையே, அழகு, பெரிய‌ தோற்றம் என‌ மிகுதியான‌ கற்பனை காரணமாக‌ இளம்வயதினரிடையே இவை அதிக‌ பாதிப்பினை ஏற்படுத்துகின்றன‌ என்பதுதான் உண்மை.

இளம்பெண்கள் ஏற்கெனவே தங்கள் உடல், அழகு, தோற்றம் குறித்த மேலான‌ வருத்தத்தில் இருக்கும்போது, இன்ஸ்டாகிராம் செயலியில், மற்றவரின் ஊடகங்களை காண்பதனால் மேலும் அக்கவலை அதிகரித்துள்ளதாக 32% பெண்கள் பேஸ்புக் நடத்திய ஆய்வில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்கள் உருவத் தோற்றம் குறித்த அச்சத்தையும் இன்ஸ்டாகிராம் ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 20 வயதான பெண் ஒருவர் இது தொடர்பாக‌ கருத்து தெரிவிக்கையில், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதால் எனது உடல் அழகானதாக இல்லை என்று உணர்ந்தேன்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.