வெளியிட்ட தேதி : 29.10.2021

Facebook changes company name to 'Meta'.

ஃபேஸ்புக் ஒரு பெரிய மாற்றத்தின், ஒரு பகுதியாக அதன் கார்ப்பரேட் பெயரை மெட்டா என மாற்றியுள்ளது (Facebook has changed its corporate name to Meta). இந்த மாற்றம் அதன் தனிப்பட்ட தளங்களான Facebook, Instagram மற்றும் Whatsapp போன்றவற்றுக்கு பொருந்தாது, அவற்றை வைத்திருக்கும் தாய் நிறுவனத்திற்கு மட்டுமே. இதையடுத்து தற்போது பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டு, அதற்கு "Meta" என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

"மெட்டா" என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது, அதாவது "அப்பால்". வெளியாட்களுக்கு, ஒரு மெட்டாவர்ஸ் VR இன் பதிப்பாகத் தோன்றலாம், ஆனால் சிலர் இது இணையத்தின் எதிர்காலமாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள். கணினியில் இருப்பதற்குப் பதிலாக, மெட்டாவேர்ஸில் உள்ளவர்கள் ஹெட்செட்டைப் பயன்படுத்தி அனைத்து வகையான டிஜிட்டல் சூழல்களையும் இணைக்கும் மெய்நிகர் உலகில் நுழையலாம்.

பிரபல சமூகவலைத்தளமான ஃபேஸ்புக் தன்னுடைய பெயரை மாற்றியுள்ளது. உலக‌ மக்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் சமூகவலைத்தளங்களுள் (Mobile Apps) ஃபேஸ்புக்கும் ஒன்று. இந்நிலையில், ஃபேஸ்புக் அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான மெட்டாவெர்ஸ் நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாக‌ தகவல்கள் தெரிவிக்கின்றன‌. இத‌னை பிரதிபலிக்கும் வகையில், தன்னுடைய பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இது குறித்து அவர் பேஸ்புக் ஆண்டு கூட்டத்தில் பேசுகையில், சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம், கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார். ஆனால், அதே சமயம் தங்கள் ஆப்களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை (change does not apply to its individual platforms, such as Facebook, Instagram and Whatsapp) என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.