வெளியிட்ட தேதி : 22.11.2021

How to Check If an iPhone Is Original?

இக்காலத்தில் உண்மை எது போலி எதுவென்று கண்டுபிடிக்க‌ இயலாத வகையில் வாங்கப்படுகின்ற‌ பெரும்பாலான‌ பொருட்களும் நம்பகத்தன்மை இழந்துள்ளன‌. இவற்றில் செல்போன் (கைபேசி) உண்மையானதா இல்லை அதுவும் போலியா என்ற‌ காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறிருக்க‌ ஐபோன் உண்மையானதா? அல்லது போலியானதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி ? எளிதான‌ சில‌ வழிகள் சில‌ உங்களுக்காக‌.

போலியான ஐபோன் (Fake iPhone) வாங்குவது உங்களது வணிகத்தின் நம்பகத்தன்மையைக் குறைக்கும். இது ஒத்திசைவு (சிங்க் / syncing) , இணைப்பு (connectivity) மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும், இதனால் வணிக தாமதங்கள் அல்லது தரவு இழக்க (loss data) நேரிடலாம். ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அல்லது பங்குபெறும் செல்போன் கேரியரிடமிருந்து நேரடியாக வாங்குவதன் மூலம் உங்கள் ஐபோன் அசல்தானா என்பதை உறுதிசெய்யலாம். ஃபிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon) ஈபே (ebay) அல்லது பிற‌ ஆன்லைன் ஸ்டோர் வழியாக‌ ஐபோனை வாங்க முடிவு செய்தால், அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க பின்வரும் வழிறைகளை நீங்கள் எடுக்கலாம்.

authenticity iPhone

காணக்கூடிய வெளிப்புற தடயங்கள்
ஐபோன் அதன் தனித்துவமான வன்பொருள் அம்சங்களால் அடையாளம் காணக்கூடியது. உங்கள் ஐபோனை நீங்கள் ஆய்வு செய்தால், மேல் வலது மூலையில் "ஸ்லீப்/வேக்" பட்டனையும், திரையின் அடியில் "ஹோம்" பட்டனையும், மேல் இடது பக்கத்தில் ரிங்கர் சுவிட்ச் மற்றும் வால்யூம் பட்டன்களையும் பார்க்க கூடும். கூடுதலாக, உங்கள் ஐபோன் பின்புறத்தில் ஆப்பிள் லோகோ அச்சிட பட்டிருக்கும். இவற்றில் ஏதேனும் காணவில்லை அல்லது வேறு இடத்தில் மாறுபட்டு இருந்தால், அது உங்கள் ஐபோன் போலியானதாக இருக்கலாம்.

சார்ஜிங் வசதி (iPhone Charging facility)

ஐபோன்களில் சார்ஜிங் microUSB port அல்லது USB-C port வசதிதான் கொடுக்கப்பட்டிருக்கும். இதைத் தவிர Lightning cable பயன்படுத்தும் வகையில் இருந்தால், அது ஒரு போலியான ஐபோன்.

ஆப்பிள் ஐடி (Apple Id)

ஆப்பிள் ஐபோனை (Apple iPhone) நாம் முதல் முறையாக பயன்படுத்தும் போது, அதில் ஆப்பிள் ஐடி கணக்கை தான் பயன்படுத்த சொல்லும். அதைத் தவிர Google அல்லது பிற கணக்குடன் உங்களைத் தூண்டினால் அது ஒரு போலி ஐபோன். அதுமட்டுமின்றி, நீங்கள் வாங்கியிருக்கும் ஐபோனில் ஆப் ஸ்டோர் செல்லும் போது Apple App Store இருந்தால், அது உண்மையான போன், அதுவே Google Play Store அல்லது வேறு ஏதேனும் மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோரைப் பார்த்தால் அது போலியானது.

ஆப்பிள் சிரி (Apple Siri)

ஐபோனில் உள்ள‌ power button-ஐ தொடர்ந்து அழுத்தி பிடியுங்கள். அப்போது ஆப்பிள் சிரி (Apple Siri) தோன்றினால், உங்கள் ஐபோன் உண்மையானது. அதற்கு பதிலாக கூகுள் அசிஸ்டண்ட், அமேசான் அலெக்சா அல்லது வேறு ஏதேனும் குரல் உதவி கேட்டால், அது போலியானது என்பதை உறுதி செய்யலாம்.

fake iPhone Check identify

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.