வெளியிட்ட தேதி : 29.10.2021

Samsung Galaxy S22 Ultra May Finally Get Faster 45W Charging With a 5000mAh Battery

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்22 தொடரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. பிராண்டின் டாப்-ஆஃப்-லைன் தொடர் (top-of-the-line series) பிப்ரவரி 2022 இல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களில், கேலக்ஸி S22, Galaxy S22+ மற்றும் Galaxy S22 Ultra ஆகியவற்றின் ரெண்டர்களை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். Galaxy S22 தொடர் கைபேசிகளும் சில நாட்களுக்கு முன்பு 3C சான்றிதழில் காணப்பட்டன. இந்நிலையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் சீரிஸ் ( Galaxy S) ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் 2022 பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 45 வாட் சார்ஜிங் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது, இது மிகவேகமாக சார்ஜ் செய்ய உதவும். சாம்சங் நிறுவனத்தின் முந்தைய பிளாக்‌ஷிப் மாடல்களில் அதிகபட்சமாக‌ 25 வாட் சார்ஜிங் மட்டுமே வழங்கப்பட்டு வந்த‌து.

சாம்சங் கேலக்ஸி எஸ் 22 அல்ட்ரா மாடல், மிகவும் மெல்லிய பெசல் வடிவமைப்பை பெறலாம். மேலும் சில ஊகங்கள் இந்த மாடல் 108MP மெயின் கேமராவை மேம்படுத்தப்பட்ட வைட் லென்ஸ் மற்றும் பிரகாசமான லென்ஸ்களுடன் பேக் செய்யப்படலாம். ஸ்டெபிலைசேஷனும் கணிசமாக மேம்படுத்தப்படும்.

சாம்சங் நிறுவனத்தின் 2022 பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக உருவாகி வரும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 45 வாட் சார்ஜிங் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது, இது மிகவேகமாக சார்ஜ் செய்ய உதவும். சாம்சங் நிறுவனத்தின் முந்தைய பிளாக்‌ஷிப் மாடல்களில் அதிகபட்சமாக‌ 25 வாட் சார்ஜிங் மட்டுமே வழங்கப்பட்டு வந்த‌து.

முன்னதாக இதே தகவல் சீன வலைதளத்திலும் இடம்பெற்று இருந்தது. இத்துடன் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மொடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் உள்ள 45 வாட் சார்ஜிங் ஸ்மார்ட்போனினை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 35 நிமிடங்கள் ஆகும்.

தகவல்களின்படி சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மொடலில் 6.8 இன்ச் 2கே அமோலெட் டிஸ்ப்ளே, 108 எம்.பி. பிரைமரி கேம‌ரா வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.