வெளியிட்ட தேதி : 30.10.2021

Beware !!! What to do before charging a smartphone? Avoid the mistakes

நாம் பல‌ செய்திகளை கேட்டிருப்போம் : ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் போது ஃபோன் வெடித்துவிட்டதாகவும் படித்திருப்போம். இதற்கு முக்கிய காரணம் நாம் செய்யும் சிறு தவறுகள் தான்.செல்போனை சார்ஜில் போடுவதற்கு முன்னர் சில விஷயங்களை சரிபார்க்க வேண்டும்.

ஃபோன் உடைந்துவிடாமல் இருக்க ஃபோனிற்கு கவர் உபயோகிக்கிறோம், இதில் நாம் அனைவரும் கவனமாக‌ இருகின்றோம். கைபேசியை சார்ஜில் போடும்போது கவரை கழட்டிவிட்டு போடுவது மிகவும் சிறந்தது. ஏனெனில் சார்ஜ் போடும்போது கைபேசி சூடாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

  • முழு சுழற்சி (0-100%) ஒரே இரவில் சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும்.
  • முழுவதுமாக சார்ஜ் செய்வதை விட 80-90% சார்ஜ் போடுவது பேட்டரிக்கு சிறந்தது.
  • உங்கள் கைபேசி குளிர்ச்சியாக இருக்க‌ வேகமான சார்ஜிங் தொழில்நுட்பங்களை சிக்கனமாக பயன்படுத்தவும்.
  • வெப்பம் என்பது பேட்டரியின் கொலையாளி.

அதுபோல‌ சார்ஜ் போடும்போது மொபைல் டேட்டாவை ஆப் செய்து வையுங்கள். மேலும் ஏதேனும் ஆப் (Mobile App) செயல் நிலையில் இருந்தால் அவற்றை மூடிவிட்டு சார்ஜ் செய்வதும் மிகவும் நல்லது. ஏனெனில் உங்கள் சார்ஜ் வீணாக பிரயோகிக்கப்பட்டு வெளியேறும்.

தூங்கும் போது இரவு முழுவதும் கைபேசியை சார்ஜ் போடுவதனாலும் உங்கள் போன் சூடாகி வெடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதே போல அதிக நேரம் ஃபோன் பிளக் பாயிண்டில் இருந்தால் ஃபோன் பேட்டரியின் (Phone Battery) தரம் போய் மொபைலின் ஆயுள் குறைந்துவிடும்.

15 சதவீதம் சார்ஜ் இண்டிகேஷனில் (அறிகுறி) இருக்கும்போதே போனை சார்ஜ் போடுவது நல்லது. போன் ஸ்விட்ச் ஆஃப் ஆன பிறகு சார்ஜ் போட வேண்டும் என‌ எண்ணாதீர்கள். அதற்காக சிறிது நேரம் சார்ஜ் போட்டு விட்டு எடுத்து விடலாம் என்று 20 அல்லது 30 சதவீத சார்ஜ் ஆனவுடனே எடுக்க வேண்டாம். குறைந்தது 80 சதவீதமாவது இருக்கும் போது சார்ஜ் எடுத்து விடுங்கள்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.