வெளியிட்ட தேதி : 04.12.2021

ஆப்பிள் ஐபோன் 13க்கு இப்படி ஒரு சோதனையா? யாரும் எதிர்பார்த்திடாத திருப்பம்.. இது தான் காரணமா?


உலகளாவிய விநியோக நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஆப்பிள், இப்போது ஒரு வித்தியாசமான சிக்கலை எதிர்கொள்கிறது: ஐபோனின் 13இன் தேவை குறைகிறது. ஐபோன் 13 வரிசைக்கான தேவை பலவீனமடைந்துள்ளது என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ள‌து. மேலும் தற்போதைய சிப்செட் கட்டுப்பாடுகள் காரணமாக ஆப்பிள் இந்த ஆண்டுக்கான ஐபோன் உற்பத்தி மதிப்பீட்டை 90 மில்லியனிலிருந்து 80 மில்லியனாகக் குறைத்தது. இப்போது இந்த எண்ணிக்கை மீண்டும் திருத்தப்படும் என்று தெரிகிறது.

ப்ளூம்பெர்க் (Bloomberg) செய்துள்ள தொழில்துறை ஆய்வுகள் மற்றும் ஆதாரங்களின்படி, ஐபோன் 13 தொடருக்கான தேவை குறைந்துள்ளதாகவும், உற்பத்தி மதிப்பீடுகளை மேலும் குறைக்கப்போவதாகவும் ஆப்பிள் அதன் சப்ளையர்களுக்குத் தெரிவித்துள்ளது.

பற்றாக்குறை மற்றும் டெலிவரி தாமதங்கள் பல நுகர்வோரை ஏமாற்றமடையச் செய்துள்ளன. மேலும் பணவீக்கம் மற்றும் ஓமிக்ரான் மாறுபாடு தொற்றுநோயால் சிரமப்படும் வணிகர்களுக்கு புதிய சவால்களைக் கொண்டு வருவதால், இது ஆப்பிள் iPhone விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

வழக்கமாக, ஆண்டுதோறும் இருப்பது போல, விடுமுறை காலத்தில், ஆப்பிள் போன்களின் விற்பனை சாதனை அளவில் இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.இதில் கணிக்கப்பட்ட நான்காவது காலாண்டின் விற்பனை மொத்தம் 117 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் விறபனையானது 6% அதிகமாகும். ஆப்பிளின் முக்கிய கூறுகளின் சப்ளையர்கள் மற்றும் அசெம்பிளி பார்ட்னர்கள் இந்த விஷயத்தில் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

2022 iPhone மாடலின் எதிர்பார்ப்பு

இத்தகைய‌ பிரச்சனைகளுக்கு மத்தியில், வாடிக்கையாளர்கள், ஐபோன் 13 ஐ (iPhone 13) முழுவதுமாகத் மறந்து, அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள மேம்படுத்தப்பட்ட பதிப்புக்காக காத்திருக்கத் தொடங்கிவிட்டார்கள். தற்போதைய வரிசையானது, ஸ்டாண்டர்ட் மாடலுக்கு 799 டாலர் (தோராயமாக ரூ. 59,890) மற்றும் ப்ரோவிற்கு 999 டாலர் (தோராயமாக ரூ. 74,890) எனத் தொடங்குகிறது. இது ஒரு புதிய வடிவமைப்பைக் கொண்ட iPhone 12 -ன் ஒரு சிறிய புதுப்பிப்பாகவே கருதப்படுகிறது. இதன் விலை ரூ. 59,999 ஆகும்/. 2022 மாடலில் பெரிய மாற்றங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.