வெளியிட்ட தேதி : 23.08.2021

Google bans 8 dangerous apps from Play Store; DELETE them from your phone now, check list

இன்றைய‌ காலகட்டத்தில் நாம் நெட்வர்க் ஹாக்கிங் மற்றும் ஹாக்கர்களின் திறன் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்வுகளைக் கண்டுவருகின்றோம். சமீப காலமாக ஹேக்கர்களின் முயற்சியால் ஏராளமான போலி மால்வேர் ஆப்ஸ்கள் (Malware apps) இணையதளங்களில் உலவுகிறது. இது போன்ற தீங்கிழைக்கும் போலி மால்வேர் ஆப்களை கூகிள் அடையாளம் கண்டு, அவற்றை கூஃகிள் பிளே ஸ்டோர் தளத்தில் இருந்து அகற்றிவருவதும் உண்மை.

ட்ரெண்ட் மைக்ரோ, 120 க்கும் மேற்பட்ட போலி கிரிப்டோகரன்சி சுரங்க பயன்பாடுகள் இன்னும் ஆன்லைனில் உள்ளன என்று கூறியுள்ளது. பயன்பாட்டின் மதிப்புரைகளை கவனமாகப் படியுங்கள்: போலி பயன்பாடுகள் பொதுவில் வெளியிடப்பட்டவுடன் ஏராளமான 5-நட்சத்திர மதிப்புரைகளைப் (5 Star rating) பெறும். 1-நட்சத்திர மதிப்புரைகளுக்கு அதிக கவனம் செலுத்துங்கள்.

இவ்வரிசையில் மேலும் சில‌ ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. தற்போது 8 ஆபத்தான ஆப்ஸ்கள் நீக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கிரிப்டோகரன்சி சுரங்க பயன்பாடுகளாக (fake cryptocurrency mining apps) மறைக்கப்பட்ட மால்வேர்களுடன் இயங்கிக்கொண்டிருப்பதைப் பாதுகாப்பு நிறுவனமான ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் கூகிளுக்கு அடையாளம் காட்டியுள்ளது.

தற்போது அந்த‌ ஆப்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு அவற்றை நீக்குவது நல்லது. அதன் பட்டியல் இதோ உங்களுக்காக‌.

  1. BitFunds - Crypto Cloud Mining
  2. Bitcoin Miner - Cloud Mining
  3. Bitcoin (BTC) - Pool Mining
  4. Cloud Wallet Crypto Holic - Bitcoin Cloud Mining
  5. Daily Bitcoin Rewards - Cloud Based Mining System
  6. Bitcoin 2021
  7. MineBit Pro - Crypto Cloud Mining & BTC miner
  8. Ethereum (ETH) - Pool Mining Cloud
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.