வெளியிட்ட தேதி : 06.11.2021

A new voice-based app, new social media platform launched called Hoote

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யா விசாகனின் குரல் அடிப்படையிலான ஹூட் என்ற செயலியை தனது குரல் குறிப்புடன் அறிமுகப்படுத்தினார். ஹூட் என்பது புதிதாக அறிமுகமாகியிருக்கும் குரல் அடிப்படையிலான சமூக வலைத் தளம் (Hoote-Voice Based Social Media App).

ஹூட் ஒரு பன்மொழித் தளம். இந்த‌ சமூக‌ தளமானது, எவராயினும் தனது சொந்தக் குரலில், விரும்பும் மொழியில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கிறது. ஹூட் செயலியில் 60-வினாடி நேரடி குரல் பதிவு விருப்பத்தை வழங்குவதோடு மட்டுமின்றி முன்னரே பதிவுசெய்த குரலையும் பதிவேற்றம் செய்யவும் அனுமதிக்கிறது.

கடந்த அக்டோபர் 25, (2021) ஆம் திய‌தியன்று ஹூட் வெளியிடப்பட்ட‌து. வெளியிட்டு வைத்தவர் சினிமா நடிகர் ரஜினிகாந்த். செயலிக்கு உரிமையாளர் அவரது புதல்வியார் சௌந்தர்யா

மொத்தம் 14 இந்திய மொழிகளிலும் 5 சர்வதேச மொழிகளிலும், அண்ட்ராயிட், ஐஓஎஸ் என இரண்டு தளங்களிலும் ஹூட் கிடைக்கிறது.

ஹூட்டில் கிடைக்கும் வசதிகள்

  1. குரல் பதிவு மூலம் உங்கள் கருத்தையும் வெளிப்படுத்தலாம்
  2. ஆடியோ லைப்ரரியிலிருந்து (Audio library) பின்னணி இசையைச் (Background music) சேர்ப்பதன் மூலம் குரலை இன்னும் மேம்படுத்தலாம்
  3. குரல் செய்தியில் ஒரு படத்தைச் சேர்க்க முடியும்
  4. ஏனைய‌ சமூகதளங்கள் போன்று லைக், கமெண்ட் மற்றும் ஷேர் செய்ய முடியும்
  5. அதிகம் பேசப்படும் (கேட்கப்படும்) டிரெண்டிங் தலைப்புகளைக் கேட்க முடியும்
  6. நீங்கள் விரும்பும் மொழியில் வாயிஸ் செய்திகளைக் (voice notes) கேட்கலாம்
  7. சினிமா நடிகர்கள், தொழில்முனைவோர், அரசியல்வாதிகள், விளையாட்டுப் பிரபலங்கள் மற்றும் நீங்கள் விரும்பும் நபர்களைப் பின்பற்றி தொடரவும் முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.