வெளியிட்ட தேதி : 03.12.2021

சில நாட்களுக்கு முன்னர் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தியதால் பலருக்கும் அதிர்ச்சியினை அளித்தது.

சில நாட்களுக்கு முன்னர் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தியதால் பலருக்கும் அதிர்ச்சியினை அளித்தது. இதற்கு ஈடாக‌, தற்போது பயனாளர்களை மகிழ்விக்க, ஜியோ நிறுவனம் அதன் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களிலும் 20 சதவீத ஜியோமார்ட் கேஷ்பேக்கை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில், ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகள் முறையே : ரூ. 719, ரூ. 666, மற்றும் ரூ.299. இந்த திட்டங்களின் வேலிடிட்டி 28 நாட்கள் முதல் 84 நாட்கள் வரையிலும் செயல்படும். ஜியோ வழங்கும் இந்த கேஷ்பேக் ஆஃபரை அனைத்து ரிலையன்ஸ் ரீடெய்ல் கடைகள் (Reliance retail shops) மற்றும் ஆன்லைன் சேனல் இருந்து பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் இதில் ஜியோ ரீசார்ஜ், ஜியோமார்ட், ரிலையன்ஸ் ஸ்மார்ட், அஜியோ, ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல், நெட்மெட்ஸ் போன்ற ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களும் அடங்கும். மேலும் வாடிக்கையாளர் ஒவ்வொரு நாளும் நிச்சயம் ரூ.200 கேஷ்பேக்கை பெறுவார்கள் என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

ஜியோவின் ரூ. 719 ப்ரீபெய்ட் திட்டம் :

தினசரி 2 GB அதிவேக டேட்டாவுடன் கிடைக்கிறது, அவற்றை குறிப்பிட்ட அளவு பயன்படுத்தியதும், வேகம் 64Kbps ஆக குறைகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 100 SMS-களையும் வழங்குகிறது. மேலும் இந்த திட்டமானது 20 சதவீத ஜியோமார்ட் கேஷ்பேக் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற பயன்பாடுகளை வழங்குகிறது.

ஜியோவின் ரூ. 666 ப்ரீபெய்ட் திட்டம் :

84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1.5 GB அதிவேக டேட்டா, 100 SMS , அன்லிமிடெட் அழைப்புகள் போன்றவற்றை வழங்குகிறது.

அடுத்ததாக ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டம் :

28 நாட்கள் வேலிடிட்டியுடன், தினசரி 2 GB அதிவேக டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 100 SMS-களையும் வழங்குகிறது.

இந்த இரு திட்டங்களும் (666 & 299) 20 சதவீத ஜியோமார்ட் கேஷ்பேக் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற பயன்பாடுகளை வழங்குகிறது. ரீசார்ஜ் செய்த மூன்று நாட்களுக்குள் கேஷ்பேக் ஆஃபர் பயனர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். அதனை ரிலையன்ஸ் ரீடெய்ல் சேனல்கள் மூலம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகநூலில் @tamilgodorg மற்றும் டிவிட்டரில் @tamilomg என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.