வெளியிட்ட தேதி : 07.12.2021

உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியின் ஆயுளை மேம்படுத்த வேண்டுமா? உங்களுக்கான குறிப்புகள் இதோ.

நீங்கள் புதிய ஃபோனை வாங்க முடிவு செய்தவுடன், சமீபத்திய செயலி, HD கேமரா, நல்ல சவுண்ட், நீண்ட கால பேட்டரி போன்ற அனைத்து அத்தியாவசியப் வசதிகளும் உள்ளதா எனச் சரிபார்த்து வாங்குகிறீர்கள். என்ன‌ இது! நல்ல‌ பேட்டரி, புது பேட்டரி உள்ள‌ ஃபோனை வாங்கினோமே? பேட்டரி சீக்கிரமே காலியாகிவிடுகிறதே? . சரி, அது நடக்கும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் பேட்டரி பேக்கப் உட்பட எல்லாவற்றிலும் ஸ்மார்ட்போன்கள் வளர்ச்சி பெற்று வந்துள்ளன. என்றாலும், ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துபவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக இருப்பது பேட்டரி பேக்கப் தான்.

புதிய தொழில்நுட்பங்கள் : ஃபாஸ்ட் சார்ஜ் செய்தல், பவர் பேங்க்களுடன் சுற்றிக் கொண்டிருப்பதை நீங்கள் இனி பார்க்க மாட்டீர்கள். அதிர்ஷ்டவசமாக, அந்த நாட்கள் முடிந்துவிட்டன, ஆனால் இப்போதும் கூட ஃபோன் பேட்டரி பேக்கப் வேகமாக குறைந்து விடுகிறது. இதற்கு காரணங்கள் உள்ளன‌.

பெரிய டிஸ்பிளே அளவு, பல சென்சார்கள் மற்றும் செயலிகளின் உயர் பதிப்பு உங்கள் ஃபோன் பேட்டரியை பாதிக்கிறது. நிரந்தர தீர்வு இல்லாவிடிலும் உங்கள் பேட்டரி ஆயுளைச் சேமிக்கவும், முன்பை விட சிறந்ததாக மாற்றவும் வழிகள் உள்ளன.

செல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

1. வைபரேஷன் (அதிர்வு) : இதை நிறுத்தவும், பதிலாக‌ டோன் செட் செய்யவும்

ரிங் டோனை விட வைபரேஷன் அதிக பேட்டரி சக்தியை எடுக்கும். டைப் செய்யும் போது அல்லது மெசேஜ் அல்லது கால் அறிவிக்கப்படும் போது லேசான வைபரேஷனை நீங்கள் வைத்திருக்க விரும்பலாம். ஆனால் இது உங்கள் பேட்டரி சக்தியை நல்ல அளவில் உறிஞ்சிவிடும். அதனால் முடிந்த அளவு வைபரேட் மோடை கட் செய்வது நல்லது.

2. வெளிச்சம் / கருப்பு ஒரு பேட்டரி சேமிப்பான்

ஆச்சரியப்படும் விதமாக, கருப்பு வால்பேப்பர் உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி ஆயுளைக் காப்பாற்றும்! உங்கள் ஸ்மார்ட்போனில் AMOLED டிஸ்ப்ளே இருந்தால், டார்க் வால்பேப்பர்களைப் பயன்படுத்தி உங்கள் பேட்டரி ஆயுளைச் சேமிக்க முடியும். AMOLED டிஸ்ப்ளேக்களில் உள்ள பிக்சல்கள் பிரகாசமான வண்ணங்களை ஒளிரச் செய்ய பேட்டரி சக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றன, மேலும் இருட்டாகக் காட்ட ஆற்றல் தேவையில்லை என்பதே இதற்குக் காரணம். செல்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், Brightness-ஐ அதிகமாக வைத்து பயன்படுத்துவார்கள். அவ்வாறு பயன்படுத்துவது செல்போனின் charge-ஐ சீக்கிரம் குறைவாக்கிவிடும். எனவே வெளியில் செல்போனை பயன்படுத்துவதாக இருந்தால் Auto Brightness Mode-ல் வைத்து விடுவது நல்லது.

3. தேவையில்லாத போது அம்சங்களை நிறுத்தம் செய்யவும்

புளூடூத், ஜிபிஎஸ், வைஃபை, மொபைல் டேட்டா (நிச்சயமாக உங்கள் இணையத்தைப் பகிர ஹாட்ஸ்பாட்) ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களின் கீழ் வருபவை. ஆனால் இந்த அம்சங்கள் பெரும்பாலான பவர் பேக்கப்பினை காலி செய்யும். தேவையில்லாத்போது, குறிப்பாக பேட்டரி குறைந்துவிட்டால், அதை அணைக்கவும். குறைந்த பேட்டரி அலர்ட் கிடைத்ததும், பேட்டரி சேமிப்பு முறை மற்றும் (Turning battery save mode) விமானப் பயன்முறையை (Airplane mode) மாற்றுவது பேட்டரியை நீண்ட நேரம் வைத்திருக்க உதவும்.

4. முன் திரையில் உள்ள விட்ஜெட்களை அகற்றவும்

உங்கள் டிஸ்பிளேவில் உள்ள அனைத்து தகவல்களையும் பார்க்க விரும்புகிறீர்களா? விட்ஜெட்டுகள் உங்களுக்கு பிடித்த அம்சங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் அது உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியினை உறிஞ்சும். உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளைச் சேமிக்க தேவையில்லாத விட்ஜெட்களை நீக்கலாம்.

5 .செயலிகளை நிறுத்தம் செய்யவும்

நம் மொபைல் போனில் நாம் வைத்திருக்கும் பெரும்பாலான செயலிகள் , நாம் பயன்படுத்தாவிட்டாலும் இயங்கிக்கொண்டே இருக்கும், எனவே தேவையற்ற செயலிகளை நிறுத்தம் (stop / close all) செய்து விடுவது நல்லது. ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்றவற்றை தேவையான பொழுது மட்டும் ஆன் செய்யலாம்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.