தீப்பெட்டி விலை இன்று முதல் உயர்வு! 2 ரூபாயாக அதிகரிக்கிறது ??
சில்லறை வியாபரம் : தீப்பெட்டி ஒன்றின் விலை, டிசம்பர் 1, 2021 முதல் தற்போதைய விலையான 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக இரண்டு மடங்காக அதிகரிக்கிறது.
சிவகாசி தீப்பெட்டி உற்பத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் அலோசனையின்படி, தமிழ்நாட்டில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தீப்பெட்டி விலை உயரும் என ஏற்கனவே தெரிவிக்கப் பட்டிருந்தது.
ஆகையினால், இன்று முதல் தீப்பெட்டி (Matchbox) விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மனத்தில் அதிருப்தியும் சங்கடமும் நிறைந்துள்ளது. ஏற்கனவே, பெட்ரோல், தக்காளி, பிற காய் வகைகளின் விலை ஏற்றம் கொண்டுள்ள நிலையில், இதையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்கின்ற நிலைக்கு மக்கள் தள்ளப் பட்டுள்ளனர். பணவீக்கம் தான்! சாமி இப்டி போச்சுன்னா.. திண்டாட்டம்தான். அதிகரித்து வருகின்ற விலை (பணவீக்கம் ), மூலப்பொருட்களின் விலை உயர்வதற்கு காரணம். தீப்பெட்டியின் இந்த விலை திருத்தத்திற்குப் பிறகு, சில்லறை விலையில், டிசம்பர் 1, 2021 முதல் தற்போதைய விலையான 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக இரட்டிப்பாகும். மக்கள் இவ்விலையினை செலுத்தி தீப்பெட்டியினை பெறலாம்.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதிதான் தீப்பெட்டியின் விலை, ஒரு பெட்டிக்கு ரூ .1 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த விலையை ரூ. 2 ஆக உயர்த்துவதற்கான முடிவை அனைத்து தீப்பெட்டி தயாரிக்கும் நிறுவனங்களும் சேர்ந்து எடுத்துள்ளன. 4 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டிகளின் விலை உயர்ந்துள்ளது. பணவீக்கம், தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கூற்றுப்படி, தீப்பெட்டி தயாரிக்க 14 வகையான மூலப்பொருட்கள் தேவைப்படுகின்றன. கடந்த 14 ஆண்டுகளில் இவற்றில் பல பொருட்களின் விலைகள் இருமடங்கு அதிகமாகி, தீப்பெட்டி உற்பத்தியின் செலவுகள் (Price Rise) அதிகரிக்கவும் செய்துள்ளன என நியாயமான காரணங்களை மேற்கோள் காட்டியுள்ளனர்.
அப்போ இன்றைய தினத்திலிருந்து, இதுவரையிலும் ஒரு ரூபாயாக விற்பனையாகிக் கொண்டிருந்த தீப்பெட்டியின் விலை இன்று முதல் இரண்டு ரூபாயாக உயர்ந்துள்ளது.