வெளியிட்ட தேதி : 30.11.2021

Xiaomi's upcoming EV factory will make up to 300,000 cars per year

Xiaomi EV உலகில் ஒரு முக்கிய நிறுவனமாக இருக்க விரும்புகிறது. Xiaomi (ஷவ்மி) தனது மின்சார கார் திட்டங்களை மார்ச் மாதத்தில் தான் அறிவித்தது, ஆனால் Xiaomi ஏற்கனவே பெரும் லட்சியங்களைக் கொண்டுள்ளது. தகவல்படி, பொருளாதார மேம்பாட்டு நிறுவனமான பெய்ஜிங் இ-டவுன், சியோமி ஆண்டுக்கு 300,000 வாகனங்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஒரு EV தொழிற்சாலையை உருவாக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆலை இரண்டு கட்டங்களில் கட்டப்படும் மற்றும் 2024 இல் மாஸ் உற்பத்தியைத் (mass production) தொடங்க கூடும்.

ஸ்மார்ட் ஃபோன், ஸ்மார்ட் கருவிகள் தயாரிப்பில் கால் பதித்து பெயர்பெற்ற‌ சீன தயாரிப்பாளரான சயோமி பல துறைகளில் தங்களை நிலை நிறுத்த அடியெடுத்து வைக்கிறது. தற்போது நிறுவனம் மின்சாரக் கார்கள் துறையில் கால் வைக்க‌ உள்ளது. சீனாவில் மின்சார வாகனங்கள் தயாரிப்பதற்கு சியோமி உருவாக்கி உள்ள கார் ஆலையின் விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.

மின்சார கார் துறையில் நுழையும் முதல் ஸ்மார்ட்போன தயாரிப்பாளர் சியோமி அல்ல. ஆப்பிள் நிறுவனமும் சில காலமாக இதே சிந்தனையில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆப்பிள் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனம் 2025-ல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்த விரும்பி ஆட்டோமொபைல் துறையில் அடியெடுத்து வைக்கிறது.

Xiaomi (ஷவ்மி) நிறுவனம் தனது EV தலைமையகம், ஆராய்ச்சி மற்றும் விற்பனை பிரிவுகளை பெய்ஜிங்கில் அமைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. Xiaomi ஏற்கனவே அதன் சில்லறை விற்பனைக் கடைகளைப் பயன்படுத்தி கார்களை விற்கத் திட்டமிட்டுள்ளது.

Xiaomiயின் கார் உத்தியான‌, ஆரம்ப மாடல்கள் மற்றும் சர்வதேச விரிவாக்கம் உட்பட இன்னும் பல அறியப்படாத விபரங்கள் உள்ளன. வெற்றிப்பாதையில் செல்கின்ற‌ Xiaomi (ஷவ்மி) 10 ஆண்டுகளில் EV பிரிவில் 10 பில்லியன் டாலர்களுக்கு சமமான முதலீடு செய்ய எதிர்பார்க்கிறது, ஆனால் இதன் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை. பெய்ஜிங் தொழிற்சாலை மேலும் கூறுகிறது - நியோ மற்றும் எக்ஸ்பெங் போன்ற சீன போட்டியாளர்களுடன் மட்டுமல்லாமல், டெஸ்லா போன்ற குறிப்பிடத்தக்க வெளிநாட்டு வாகன உற்பத்தியாளர்களுடன் போட்டியிடும் ஒரு பிரதான EV உற்பத்தியாளராக Xiaomi விரும்புகிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.